Screen Reader Access     A-AA+
அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301, மதுரை .
Arulmigu Murugan Temple, Solaimalai Mandapam, Alagarkovil - 625301, Madurai District [TM032124]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அறுபடை அண்ணலும், அருட்பெருவள்ளலும் அன்பர்தம் துணையுமாகிய ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக அமைந்து விளங்குவது, சோலைமலை, சோலைவெற்பு, ரிஷபகிரி, குலமலை, குலகிரி, பழமுதிர்ச்சோலை, பழமுதிர்சோலை மலை எனும் பழம்பெருந்தலம். இத்தலம் அழகர்மலையில் அமைந்து விளங்குகின்றது. சோலை மலை என்னும் பெருமை மிகு தலம் மதுரை மாநகரிலிருந்து வடக்கே சுமார் 21 கி.மீட்டர் தூரத்தில் மலை மேல் 3 கி.மீ உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அருட்கடலாகிய முருகப்பெருமானது ஏனைய படை வீடுகளுக்கு இல்லாது இப்படை வீட்டுக்கு மட்டுமே உரிய தனிப்பெருஞ்சிறப்பொன்றுண்டு. அதாவது முருகப்பெருமானின் இத்தலமானது சைவப்பெருமைகளையும் மற்றும் திருமாலின் வைணவப் பெருமைகளையும் ஒருசேர கொண்டு விளங்குகிறது. அழகே வடிவான அபிஷேக பிரியரான முருகப்பெருமானும் அலங்கார பிரியரான...